பெங்களூருவில் வீட்டுப்பாடம் செய்யாத 2ம் வகுப்பு மாணவியை ஆசிரியை பெல்டால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

380

பெங்களூருவில் வீட்டுப்பாடம் செய்யாத 2ம் வகுப்பு மாணவியை ஆசிரியை பெல்டால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அருகே நெலமங்களா நகரில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருடைய மகள் பாவனா, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளி முடிந்தவுடன் வீட்டின் அருகேயுள்ள தனியார் டியூஷன் மையத்திற்கு பாவனா சென்று படிப்பாள். இந்நிலையில் பாவனா, நேற்று முன்தினம் வீட்டுப்பாடம் செய்யாமல் டியூசனுக்கு சென்றதாகவும், இதை அறிந்த டியூஷன் ஆசிரியை லதா, சிறுமியை பெல்ட்டால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரையடுத்து தலைமறைவான டியூஷன் ஆசிரியை லதாவை போலீசார் தேடி வருகின்றனர்.