பெங்களூரில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் இதுவரை ஆயிரத்து 399 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

258

பெங்களூரில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் இதுவரை ஆயிரத்து 399 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் கடந்த மாதம் 12–ந் தேதி தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஏராளமான தமிழக வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. குறிப்பாக 100க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதில் 49 போலீசாரும், 17 பொதுமக்களும் படுகாயமடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ஆயிரத்து 399 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி
பலர் பஸ்சை கொளுத்திய போது, செல்பி எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து ஆய்வு ஆய்வு செய்ததில் 28 வீடியோக்கள், 120 புகைப்படங்கள் சிக்கியுள்ளன. இதன் அடிப்படையில் மேலும் பலரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.