மத்திய அரசின் திட்டங்கள் கிடைக்கவே பாஜக-வுடன் நல்லுறவு – அமைச்சர் பாண்யராஜன்

162

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே பாஜகவுடன் நல்லுறவு வைத்துள்ளதாக அமைச்சர் பாண்யராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆவடி ராணுவ உடை தயாரிக்கும் தொழிற்சாலையில் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் தொழிற்சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உதித்ராஜ் மற்றும் அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், ஜிஎஸ்டி போன்ற விவகாரத்தில் மத்தியில், மாநிலத்திலும் வெவ்வேறு நிலைப்பாட்டுடன் திமுக செயல்பட்டதாக குற்றச்சாட்டினார்.

இதுபோன்று பல்வேறு குளறுபடிகளை செய்து விட்டு, தற்போது முதுகெலும்புடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவதாக அவர் விமர்சித்தார். அதிமுகவில், எந்த பிளவும் இல்லை என்றும், கட்சி ஒருநிலைப்பாட்டுடன், ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டும் செல்லும் பணியில் ஈடுபட்டு வருவதாக பாண்டியராஜன் குறிப்பிட்டார்.