ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம் !

112

கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுட் கால தடை உத்தரவை உச்சநீதிமன்றம் அதிரடியாக நீக்கியது.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் எனும் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் வாழ்நாள் தடை விதித்து பி.சி.சி.ஐ உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக பி.சி.சி.ஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிடப்பட்டது. மேலும் ஸ்ரீசாந்தை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பரிசீலிக்கவும் பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுது.