வானில் பறந்த காற்று பலூன் தீப்பிடித்தது. அமெரிக்காவில் 16 பேர் உயிரிழந்த பரிதாபம்.

306

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 16 பேருடன் பறந்த காற்று பலூன் விபத்துக்குள்ளானதில் அதில் சென்ற அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டின் நகரத்தின் தென் பகுதியில் 16 பேருடன் காற்றில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வானில் பறந்த சூடான காற்று பலூனில், தீப்பற்றி எரியத் தொடங்கியது.
ஆஸ்டன் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் லோக்சார்ட் என்ற இடத்தில் பலூன் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலூனில் சென்ற அனைவரும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.