தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

191

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, மத்திய மாநில அரசுகளின் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் வன்கொடுமை தடுப்பு பாதுகாப்பு சட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ந இக்கூட்டத்தில், 20 தலித் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தலித் மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் அதிகரித்துள்ளதாக கூறினார்.

தூத்துக்குடி தாக்குதலுக்கு மத்திய அரசு முழுக்க முழுக்க காரணம் என்று கூறிய அவர், மத்திய அரசுக்கு வேண்டிய வேதாந்தாவை திருப்திபடுத்தவே இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். எதற்கெடுத்தாலும் விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி, ஏன் இன்னும் இதற்கு வாய் திறக்காமல் உள்ளார்? என்றும் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.