சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி இன்று நடைபயணம் – கே.பாலகிருஷ்ணன்

182

சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி இன்று திட்டமிட்டப்படி நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக, விவசாயிகளை நிர்ப்பந்தித்தும், துன்புறுத்தியும் தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி, திருவண்ணாமலை முதல் சேலம் வரை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைபயணம் செல்ல கடிதம் கொடுத்தும், அனுமதி தர மறுப்பது காவல்துறையின் எதேச்சதிகார போக்கை காட்டுவதாக கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியும், எதிர்கட்சி மற்றும் அமைப்புகளுக்கு ஒரு நீதியும் காவல்துறை கடைபிடிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ள அவர், திட்டமிட்டபடி இன்று முதல் நடைபயணம் மேற்கொள்வது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.