தனது ஜாதியைச் சொல்லி திட்டுகிறார், அடிக்கிறார் என்று கூறி நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

1748

தனது ஜாதியைச் சொல்லி திட்டுகிறார், அடிக்கிறார் என்று கூறி நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
ரஜினிகாந்த், வடிவேலு, விவேக் உட்பட பல நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் தாடி பாலாஜி நடித்துள்ளார். தற்போது, விஜய் தொலைக்காட்சியில், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். மாதவரத்தில் வசித்து வரும் பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கு மோதல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாதவரம் காவல் நிலைத்தில் பாலாஜி மீது நித்யா திடீரென பரபரப்புப் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது சமுதாயத்தைக் குறிப்பிட்டு சொல்லி திட்டுகிறார். அடிக்கிறார். கொடுமை செய்கிறார் என்று நித்யா குறிப்பிட்டுள்ளார். நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி கொடுத்துள்ள இந்த பரபரப்பான புகாரால் சின்னத் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. புகார் தொடர்பாக, இதுவரை வழக்குப்பதிவு செய்யாத போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.