பக்ரைனில் நடைபெற்ற பார்முலா1 கார்பந்தயத்தில் ஜெர்மனி வீரர் வெட்டல் முதலிடத்தை பிடித்தார்.

265

பக்ரைனில் நடைபெற்ற பார்முலா1 கார்பந்தயத்தில் ஜெர்மனி வீரர் வெட்டல் முதலிடத்தை பிடித்தார்.

நடப்பாண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. பக்ரைனில் உள்ள கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் 308 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற பந்தயத்தில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில், முன்னாள் சாம்பியனான செபாஸ்டியன் வெட்டல் 1 மணி 33 நிமிடங்களில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார்.
இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் இரண்டாவது இடத்தையும், பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 3-வது இடைத்தையும் பிடித்தனர்.