நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையிலிருந்து 100 இந்திய மீனவர் விடுவிப்பு

113

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நூறு பேரை அந்நாட்டு அரசு நல்லெண்ண நடவடிக்கையாக விடுதலை செய்துள்ளது.

பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 360 பேரை பாகிஸ்தான் அரசு சிறையில் அடைத்தது. இதனிடையே, புல்வாமா தாக்குதலில், 40 இந்திய வீரர்கள் மரணமடைந்ததால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாகவும், நல்லெண்ண அடிப்படையிலும், நீண்டநாள் சிறையில் உள்ள 360 மீனவர்களும் 4 கட்டங்களாக விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அறிவித்தது.

அதன்படி முதல் கட்டமாக கடந்த 7ஆம் தேதி 100 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து இரண்டாவது கட்டமாக தற்போது மாலிர் சிறையில் உள்ள 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. இவர்கள் ரெயில் மூலம் லாகூர் அழைத்துவரப்பட்டு, வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.