இந்திய நிலைகளின் மீது தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு..!

111

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய நிலைகளின் மீது தொடர்ந்து ஐந்தாவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் கடந்த சில நாட்களாக துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் குல்பூர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டனர்.

ஜம்மு மாவட்டத்துக்குட்பட்ட ராம்கர் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். ஆனால் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு இடங்களில் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்ததாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.