புதிய சாதனை படைத்த பாகுபலி – 2 | வெளியான 4 நாட்களில் ரூ.600 கோடி வசூல்

826

உலக ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த பாகுபலி – 2 திரைப்படம் வெளியான 4 நாட்களில் 600 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
பிரபாஸ், ராணா டகுபதி, தமன்னா, அனுஷ்கா ஆகியோர் நடிப்பில், ராஜமவுலி இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம் பாகுபலி – 2. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில், மிகப்பிரம்மாண்டமான VFX முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் 600 திரையரங்குகள் உட்பட நாடு முழுவதும் 9 ஆயிரம் திரையரங்குகளில் கடந்த 28 ஆம் தேதி பாகுபலி -2 திரையிடப்பட்டது. படம் வெளியான முதல் நாளிலேயே 125 கோடி வசூல் செய்து தங்கல், சுல்தான் ஆகிய பாலிவுட் படங்களின் சாதனையை முறியடித்தது. இந்தநிலையில், நான்கு நாட்களில் 600 கோடி வசூல் செய்து பாகுபலி – 2 புதிய சாதனை படைத்துள்ளது. 4 நாட்களில் தென்னிந்தியாவில் மட்டும் 250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.