முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் ஓய்வு..!

365

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் பத்ரிநாத் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகள், 7 ஒரு நாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் பத்ரிநாத் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக 32 சதம் உள்பட பத்தாயிரத்து 245 ரன்களை பத்ரிநாத் குவித்துள்ளார். நடந்து முடிந்த டிஎன்பிஎல் போட்டியில் காரைக்குடி காளை அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டார். இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில், ஓய்வு குறித்து விளக்கம் அளித்து பேசிய பத்ரிநாத், தமக்கு அனைத்து போட்டிகளிலும் ஒத்துழைப்பு அளித்த சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.