பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை..!

124

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் 9 மாதத்திற்குள் முடித்து வைக்க வேண்டும் என சிறப்பு கோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் பிரச்சினைக் குரிய இடத்தில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை ரேபரேலி நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து சி.பி.ஐ., உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அப்போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்தும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது வருகிறது. இந்நிலையில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தொடர்பான வழக்கை கீழ் நீதிமன்றம் 9 மாதத்தில் விசாரித்து முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.