பாபர் மசூதி விவகாரம் வழக்கில் பிரணாப் முகர்ஜிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ..!

969

பாபர் மசூதி விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரணாப் முகர்ஜி தான் எழுதிய கொந்தளிப்பான வருடங்கள் என பொருள்படும் “ டர்புலன்ட் இயர்ஸ் “ என்ற புத்தகத்தில் பாபர் மசூதி இடிப்பு பற்றி சில குறிப்புகளை எழுதியுள்ளார். இக்குறிப்புகள் இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக தெரிவித்து யு.சி.பாண்டே என்பவரும் சில வக்கீல்களும் இணைந்து பிரணாப் முகர்ஜி மீது வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் பிரணாப் முகர்ஜியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.