சர்வதேச சதிகாரர்களால் தூத்துக்குடி போராட்டம் தூண்டப்பட்டது – யோகா குரு பாபா ராம்தேவ்

134

சர்வதேச சதிகாரர்களால் தூத்துக்குடி போராட்டம் தூண்டப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

யோகா குரு பாபா ராம்தேவ், வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வாலை சந்தித்து பேசினார். பின்னர் அனில் அகர்வால் மற்றும் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சர்வதேச சதிகாரர்களால் ஸ்டெர்லைட் போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சாலைகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கான கோவில்கள் என தெரிவித்துள்ள அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கக் கூடாது என்றார். பாஜக ஆதரவாளரான பாபா ராம்தேவின் இந்த கருத்து தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.