பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

249

பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
2016-17ஆம் ஆண்டு பி.எட். மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் பி.எட். படிப்புக்காக அரசு, அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 777, இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 9ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நேரிலும், தபாலிலும் ஆகஸ்ட் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.