வீரர் அழகு முத்துக்கோனின் 308வது பிறந்தநாள் இன்று..!

883

தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு தக்கவைத்துள்ளது என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப்போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 308வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைமுன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின், பாண்டியராஜன், அதிமுக செய்தி தொடர்பாளர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு தக்கவைத்துள்ளதாக குறிப்பிட்டார். திமுக சார்பில் கனிமொழி உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.