சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜைகள் இன்றுடன் நிறைவு !

337

சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகள் இன்றுடன் நிறைவடைவதை அடுத்து, நாளை கோவில் நடை அடைக்கப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், இந்த ஆண்டு, மண்டல பூஜை மற்றும் மகரவிளக்குப் பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் 15-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, 16-ஆம் தேதி காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி, சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகள் இன்றுடன் நிறைவடைவதை அடுத்து, நாளை கோவில் நடை அடைக்கப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது.