அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாஜக நடவடிக்கை எடுக்கவில்லை என இந்து மகா சபா குற்றச்சாட்டு

259

அயோத்தியில் ராமர் கோயில் கட்டவும், பசு பாதுகாப்பிற்காகவும் மத்திய பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்து மகா சபா குற்றம் சாட்டியுள்ளது.

அகில பாரத இந்து மகா சபா சார்பில் கும்பகோணத்தில் இந்து ஸ்வாபிமான் யாத்ரா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அகில பாரத இந்து மகா சபா தலைவரும் அயோத்தி கோயில் வழக்கை நடத்தி வருபவருமான சுவாமி சக்கரபாணி மகாராஜ் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து மகா சபா தலைவர் பாலசுப்ரமணியன், வருகிற டிசம்பர் 6ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்காக அயோத்தியில் இந்துக்களைத் திரட்டப் போவதாகத் தெரிவித்தார்.