அயோத்தி தாக்குதல் வழக்கு – 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!

145

அயோத்தியில் 2005ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் கடந்த 2005ம் ஆண்டு 5-ம் தேதி பலத்த பாதுகாப்பு நிறைந்த ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி வளாகத்திற்குள் நுழைந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டவனை வழங்கி நீதிபதி தினேஷ் சந்திரா உத்தரவிட்டார்.