சிறப்பாக செயல்பட்ட எம்.பி-களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு..!

280

கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட எம்.பி-களுக்கான விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்களுக்கு விருது வழங்கும் விழா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறந்த எம்.பி.,க்களுக்கு விருதுகளை வழங்கினார்.இதில் 2013 ஆம் ஆண்டுக்கான விருதை முன்னாள் பாஜக எம்.பி நஜ்மா ஹெப்துல்லாவும், 2014 ஆம் ஆண்டுக்கான விருதை பாஜக எம்.பி நரேன் யாதவும் பெற்றுக்கொண்டனர். இதே போல், 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த எம்.பி விருதை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பெற்றுக்கொண்டார். 2016 ஆம் ஆண்டுக்கான விருது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதிக்கும், 2017 ஆம் ஆண்டுக்கான விருதை பார்த்ருஹரி மஹ்தாபுக்கும் வழங்கப்பட்டன.இந்த விழாவில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.