அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

255

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 5-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விழா குழுவினர் சார்பாக, அங்காள ஈஸ்வரி கோயிலில் முகூர்த்தக் கால் ஊண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெங்கால் கண்மாய் பாசன விவசாய சங்கத் தலைவர் கண்ணன் இதில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காலை 8 மணிக்கு தொடங்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 500 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.