ஆஸ்திரேலியா அருகே டோங்கோ தீவில் 6.1 என்ற ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம்….

275

ஆஸ்திரேலியா அருகே டோங்கோ தீவில் 6.1 என்ற ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதியடைந்தனர்.
ஆஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு டோங்கா தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள நீடா என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.1 என்ற ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சாலைகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 97 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர நில அதிர்வின் காரணமாக கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படாது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.