ஆஸ்திரேலிய பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரரான ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரரான சாய் பிரணீத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

221

ஆஸ்திரேலிய பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரரான ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரரான சாய் பிரணீத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டியில் இந்திய வீரரான ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரரான சாய் பிரணீத்துடன் மோதினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சாய் பிரணீத்தை 25க்கு 23, 21க்கு 17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றுள்ளார். இதன்மூலம் ஸ்ரீகாந்த் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.