ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி !!!

417

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் மூலம் களமிறங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இருப்பினும் தோனி மற்றும் ஹார்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி ரன்களை உயர்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது.மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் 21 ஓவர்களாக குறைக்கப்பட்டு, ஆஸ்திரேலிய அணிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்து அடுத்து பெவிலியன் திரும்பினர். நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுகளை பறிக்கொடுத்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.