சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது, கார் மோதிய விபத்தில் 12 பேர் படுகாயம்.

2038

ஆஸ்திரேலியாவில் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது, கார் மோதிய விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
மெல்போர்ன் நகரில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிக்குள் வேகமாக புகுந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இதில் 12 பேர் படுகாயமடைந்தனர். அங்கு விரைந்து சென்ற போலீஸார் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கடந்த ஜனவரி மாதம் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிக்குள் டிரக் புகுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.