டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி மூலம் தமிழகத்தில் உள்ள இளம் வீரர்களின் திறமைகளை அறிந்து கொள்ள முடியும் – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக்

1340

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி மூலம் தமிழகத்தில் உள்ள இளம் வீரர்களின் திறமைகளை அறிந்து கொள்ள முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எல் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், இதில் வர்ணனையாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் நெல்லைக்கு வந்த பிராட் ஹாக் மாலை முரசு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது , இந்திய அணியில் பீல்டிங் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். இதனால் உலக கோப்பை போட்டியில் கோப்பை வெல்லும் பலம் வாய்ந்த அணியாக இந்தியா திகழ்வதாக தெரிவித்தார். மேலும் இந்திய கபடி விளையாட்டு தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் பிராட் ஹாக் கூறினார்.