ஆஸ்திரேலியாவிற்கு, சட்ட விரோதமாக தப்பி செல்ல இலங்கை அகதிகள் பயன்படுத்திய விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டு குமரி மாவட்டம் சின்ன முட்டம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

263

ஆஸ்திரேலியாவிற்கு, சட்ட விரோதமாக தப்பி செல்ல இலங்கை அகதிகள் பயன்படுத்திய விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டு குமரி மாவட்டம் சின்ன முட்டம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த ஏராளமான தமிழர்கள் அகதிகளாக பல மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், வேலூர் முகாமில் உள்ள 9 இலங்கை அகதிகள், முட்டம் கடற்கரையில் இருந்து ஒரு விசை படகில் ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்றனர். கடலில் சாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தால், மீண்டும் மீனவ கிராமத்தில் கொண்டு விடப்பட்டனர்.
இது தொடர்பாக கியூ பிரிவு போலீசார் அவர்களை ஏமாற்றிய ஏஜெண்டுகளிடமும், இலங்கை அகதிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட விசைப்படகு பாதுகாப்பு காரணங்களுக்காக கன்னியாகுமரியில் உள்ள சின்ன முட்டம் துறைமுகத்தில், கடலோர பாதுகாப்பு படையினரால் நிறுத்தப்பட்டுள்ளது.