மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி | ஆஸ்திரேலியே அணி அபார வெற்றி

93

ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியே அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை, 2 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெற்று 2 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனிடையே மூன்றாவது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கவாஜா 104 ரன்களையும், கேப்டன் பிஞ்ச் 93 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது.

314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் சீரான இடைவெளிகளில் வீரர்கள் ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 48 புள்ளி 2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இந்திய அணியால், 281 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.