ஆகஸ்ட் 14 ஆம் தேதி மேலூரிலிருந்து சுற்றுப்பயணம் செய்து தினகரன் ஆதரவாளர்களை சந்திக்கிறார்.

375

ஆகஸ்ட் 14 ஆம் தேதி மேலூரிலிருந்து சுற்றுப்பயணம் செய்து தினகரன் ஆதரவாளர்களை சந்திக்கிறார்.
இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் மேலூரில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஆகஸ்ட் 23 ஆம் தேதி வடசென்னையிலும், 29 ஆம் தேதி தேனியிலும், செப்டம்பர் ஐந்தாம் தேதி கரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தினகரன் உரையாற்றுவார் என கூறப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் செப்டம்பர் 12 ஆம் தேதியும், திருநெல்வேலியில் 23 ஆம் தேதியும் தர்மபுரியில் 26 ஆம் தேதியும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், திருச்சியில் செப்டம்பர் 30 ஆம் தேதியும், சிவகங்கையில் அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெறும் என பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தினகரன் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.