கூலிப்படையை வைத்து தனியார் கம்பெனி மேலாளர் கொலை | பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

246

ஆத்தூர் அருகே முன் விரோதம் காரணமாக, கூலிப்படையை வைத்து தனியார் கம்பெனி மேலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் நடுவலூர் கிராமத்தில் வசித்த செந்தில்குமார், அங்குள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இவருடைய வீட்டிற்கு அருகில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே, கடந்த 10 ஆண்டுகளாக நிலப்பிரச்சனையில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செந்தில்குமார்-மணிகண்டன் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், கூலிப்படையை வைத்து தனியார் கம்பெனி மேலாளரை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மணிகண்டன் உறவினர்கள் பிணத்துடன் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.