2018ம் ஆண்டுக்கான 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

212

2018ம் ஆண்டுக்கான 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அளவு இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுதுவதற்கான கால அளவு 3 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வுகள் மார்ச் 16ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும் என்றும், தேர்வு முடிவுகள் மே மாதம் 23ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வுகள் மார்ச் 7ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 16ம் தேதி முடிவடையும் என்றும், தேர்வு முடிவுகள் மே மாதம் 30ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6ம் தேதி நிறைவடையும் என்றும், மே மாதம் 16ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மனு அழுத்தமின்றி மாணவர்கள் படிக்க முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.