பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர்கள்..!

212

கன்னியாகுமரி அருகே பேருந்தை வழிமறித்த இரண்டு வாலிபர்கள் அதன் ஓட்டுநரை தாக்கிய காட்சிகள் சிசிடிவி கேமராவின் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே திக்கணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் பபிஆல்வின். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வழக்கம்போல் மாணவர்களை பேருந்தில் ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது பேருந்தை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் குளச்சல் கல்லுக்குட்டம் பகுதியில் பேருந்தை வழிமறித்தனர்.

தொடர்ந்து ஓட்டுநர் பபிஆல்வினை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் படுகாயமடைந்த பபிஆல்வினை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர். தற்போது வாலிபர்கள் ஓட்டுநர் பபிஆல்வினை தாக்கிய காட்சிகள் சிசிடிவி கேமரா மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.