அதிரடி வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு வீரர்கள்..!

255

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் ரபியாபாத்தில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய பாதுகாப்பு படை மற்றும் காஷ்மீர் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கு இடையே நடந்த பயங்கர சண்டையில், தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இதனையடுத்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளைத்திற்குள் கொண்டுவரப்பட்டது.