கணவனை சரமாரியாக அடித்து துவைத்த மனைவி..!

665

கோவையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை மறைத்து திருமணம் செய்து கொண்ட கணவனை மனைவி சரமாரியாக தாக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கோவை சாய்பாபா கோவிலுக்கு வந்த கணவன், மனைவி திடீரென சண்டை போட்டுக் கொண்டனர். இரண்டு பேருக்கும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தற்போது தான் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, கோயில் நுழைவாயில் முன்பே நடுரோட்டில் வைத்து கணவனை சரமாரியாக அடித்து துவம்சர் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மக்கள் செல்லும் சாலையில் இருவரும் சண்டை போட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.