அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் பிருத்வி – 2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

294

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் பிருத்வி – 2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
பிருத்வி ஏவுகணை 2003ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டது. 500 கிலோ முதல் ஆயிரம் கிலோ வரை எடை கொண்ட குண்டுகளை சுமந்து செல்லும் வகையில், பிருத்வி – 2 ஏவுகணை வடிவமைக்கப்பட்டது. இந்த ஏவுகணை இரண்டாவது முறையாக இன்று பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் சாந்திபூரில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட பிருத்வி வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது. 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை பிருத்வி தாக்கி அழிக்கும் திறன் படைத்தது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை இந்த ஏவுகணைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.