நாளை முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

256

நாளை முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததில் இருந்து ஏ.டி.எம். மற்றும் வங்கிகளில் பணம் படுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி தற்போது ஏ.டி.எம்.களில் நாள் ஒன்றுக்கு 10ஆயிரம் ரூபாய்வரை எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில், நாளை முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருப்போர் வழக்கம் போல், ஏ.டி.எம்.களில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. இதனிடையே ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இத்துடன் ஒவ்வொரு வங்கியும், தங்களுக்கான உச்சவரம்பு கட்டுப்பாட்டை அவர்களே விதித்து கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.