தொடர் விடுமுறைக்கு பிறகு ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

374

தொடர் விடுமுறைக்கு பிறகு ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
2 நாள் விடுமுறையை அடுத்து, பொதுமக்கள் தங்கள் அவசிய தேவைகளுக்காக பணம் எடுக்க ஏடிஎம்-களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடந்த சனிக்கிழமை அன்று முதியோர்களுக்கான வங்கி சேவை என அறிவிக்கப்பட்டதாலும், ஞாயிறு விடுமுறை என்பதாலும் 2 நாட்களாக வங்கிகள் சென்று பணம் எடுக்க முடியவில்லை. இதனால், உணவுக்கும், மருத்துவ செலவுக்கும் பணமின்றி தவிப்பதாகவும் மக்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும், ஏடிஎம்-களில் பணம் நிரப்பும் பணி மிக மெதுவாக நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள், பல மணி நேரம் நீண்ட வரிசையில் நிற்பதாக வேதனை தெரிவித்தனர்.

வங்கிகளின் மூலமாக ஒருவர் 2000 ரூபாய் மட்டுமே பெற முடியும் என மத்திய அரசு அறிவித்ததால், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வங்கிகளில் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.