குற்றாலம் அருகே ATM-ல் நூதன கொள்ளையில் ஈடுபட முயன்ற 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

205

குற்றாலம் அருகே ATM-ல் நூதன கொள்ளையில் ஈடுபட முயன்ற 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், குற்றாலம்-தென்காசி செல்லும் சாலையில் ATM ஒன்று அமைந்துள்ளது. இங்கு, கடந்த மாதம் மர்மநபர்கள் சிலர் சிறிய அளவிலான கேமிரா ஒன்றினை பொருத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனிடையே, குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள ATM-ல் இருந்து பணம் எடுத்துவிட்டு வெளிவந்த கனகராஜ் என்பவரிடம் இருந்து, மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த முத்தமிழ்குமரன், கார்த்திக்கேயன், முபாரக் அலி, ராபின் சைமன் ஆகிய 4பேரை கைது போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் குற்றாலத்தில் உள்ள ATM-ல் கேமிரா பொருத்தி நூதன கொள்ளையில் ஈடுபட முயன்றவர்கள் என்பது தெரியவந்தது.