மரியா புயலினால் கடும் சேதம் : 32 பேர் பலியானதாக தகவல்

354

அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள மரியா புயல் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள மரியா புயல் கரீபியன் தீவு நாடான டொமினிகாவை தாக்கியதில், அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சூறைக்காற்று வீசியதில், பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.டொமினிகாவை தொடர்ந்து டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை புயல் நேற்று தாக்கியது. மணிக்கு 205 கி.மீ, வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ள மரியா புயலுக்கு இதுவரை 32 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புயலின் தாக்கம் இன்னும் முழுவதும் குறையாததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்க்கும்படி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.