அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் – விஜயகாந்த்

73

அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தை பொதுமக்களுக்காக அதிகரிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாற்பது ஆண்டுகளுக்குப்பின், அத்திவரதரை பூஜை செய்து 48 நாட்கள் தரிசிப்பதற்காக பார்வைக்கு வைப்பது மக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அத்திவரதரை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு தரிசிக்கும் நேரத்தை அதிகரித்து, பக்தர்களுக்கு அனைத்து அத்தியாவசிய உதவிகளும், பாதுகாப்பும் தமிழக அரசு செய்திட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள விஜயகாந்த்,

அத்திவரதரை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு எல்லா விதத்திலும் தமிழக அரசாங்கம் உதவி செய்திடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.