பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 84-வது பிறந்தநாள் விழா..!

365

மாலை முரசு அதிபர் தெய்வத்திரு பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 84-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி சென்னை மாலை முரசு அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தொழிலதிபர் வி,ஜி.சந்தோஷம், மாலை முரசு குழுமங்களின் நிர்வாக இயக்குநர். இரா.கண்ணன் ஆதித்தன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ஞான தேசிகன், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் சேம.நாராயணன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் வி.பி.கலைராஜன், வெற்றிவேல், மா. சௌந்தரபாண்டியன் மற்றும் நாட்டுப்புற பிண்ணனி பாடகியும், நடிகையுமான சின்னபொன்னு குமார், நகைச்சுவை நடிகர்கள் நெல்லை சிவா, முத்துக்காளை, கிங்காங், ஸ்டண்ட் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.