பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் | அதிபர் இமானுவல் மேக்ரான் முன்னிலை

247

பிரான்ஸ் அதிபர் தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிபர் இமானுவல் மேக்ரான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றார். இந்நிலையில் 577 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு முதல் சுற்று தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்நிலையில் முதல் சுற்று வாக்குப்பதிவில் அதிபர் இமானுவல் மேக்ரான் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளனர். இதனால் அதிபர் தேர்தலை போன்று நாடாளுமன்ற தேர்தலிலும் இமானுவேல் மேக்ரான் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.