அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜரானார்.

310

அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜரானார்.
அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபாரம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபாரதத்தை ரத்து செய்யக்கோரி தினகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் தினகரன் ஆஜராகவில்லை. இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில்
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது, வழக்கின் விசாரணையை இன்று மாலை 3 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். ஆனால் இதற்கு தினகரன் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணை மூன்று மணிக்குதான் நடைபெறும் என அறிவித்து விட்டு தமது அறையிலிருந்து வெளியேறினார்.