சட்டப்பேரவையை உடனே கூட்ட வலியுறுத்தி சபாநாயகர் தனபாலுடன் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

257

சட்டப்பேரவையை உடனே கூட்ட வலியுறுத்தி சபாநாயகர் தனபாலுடன் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபாலை எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் பிரச்சனை, வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட தனபால் சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழுவை கூட்டி இது குறித்து விவாதிப்பதாக தெரிவித்தாக ஸ்டாலின் தெரிவித்தார்.