சட்டசபையில் சோலார் பேனல் வழக்கு அறிக்கை தாக்கல் செய்தார் பினராய் விஜயன்!

327

கேரள சட்டசபையில் சோலார் பேனல் வழக்கு அறிக்கையை, முதல்வர் பினராய் விஜயன் தாக்கல் செய்தார்.
கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய சோலார் பேனல் வழக்கில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, அமைச்சர்கள் பலரது பெயரும் இடம் பெற்றது. இந்த வழக்கு குறித்து நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சட்டசபையில், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே சோலார் பேனல் வழக்கு குறித்த அறிக்கையை முதல்வர் பினராய் விஜயன் தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், சோலார் பேனல் ஊழல் மூலம் மக்களை ஏமாற்ற முயன்றாக அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.