சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்..!

168

சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ் பதிலளித்து பேசுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவையில், விதி எண் 110ன் கீழ் புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் 4 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் மற்றும் ராமசாமி படையாச்சியார் பிறந்த நாளையும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். பத்திரிகையாளர்களின் நலனில் தமிழக அரசு அதிக அக்கறை கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

இந்தநிலையில், சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ் பதிலளித்து பேசுகிறார்கள்.