மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை..!

396

புதுச்சேரி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அன்பழகன், புதுச்சேரி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் நாராயணசாமி, தற்போது இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.