மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அவரது பெயரில் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பாண்டியராஜன்

158

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அவரது பெயரில் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி, காமராஜர் பல்கலையில் அவரது பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், காமராஜர் பல்கலையில் முத்துராமலிங்க தேவர், ஜாகீர் உசேன் பெயர்களில் ஆய்வு இருக்கைகள் செயல்பட்டு வருவதை சுட்டிக் காட்டினார். காமராஜர் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். centre for kamaraj studies என்ற பெயரில் அந்த இருக்கை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.